Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஆசியக் கோப்பையை வென்று வெற்றி வாகை சூடியது இலங்கை

சியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி. இதன் மூலம் ஆசியக் கோப்பையை வென்று சாதித்துள்ளது.
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 260 ரன் குவித்தது. பவாத் ஆலம் 114 ரன்னும், மிஸ்பா உல் ஹக் 65 ரன்னும், உமர் அக்மல் 59 ரன்னும் எடுத்து, அணியின் ரன் உயர்வுக்கு வழிவகுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
261 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணி, 46.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 261 ரன் எடுத்து வெற்றி வாகை சூடியது.
இலங்கை அணியில் திரிமன்னே 101 ரன் எடுத்தார். ஜெயவர்த்தனே 75 ரன்னும், பெரேரா 42 ரன்னும் எடுத்தனர்.
இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வென்றதன் மூலம், 2013/14 ஆசியக் கோப்பையை இலங்கை அணி வென்றது.
CRICKET-ASIACUP-PAK-SRI
lanka win asia cup (1)
lanka win asia cup (2)
CRICKET-ASIACUP-PAK-SRI

Post a Comment

0 Comments