மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் சீன தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்டு மாயமான விமானம் தன் திசையை மாற்றிக் கொண்டு மீண்டும் கோலாலம்பூர் நோக்கி பயணித்தருக்கக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய அதிகாரிகள் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
மலேசிய அரசுக்கு சொந்தமான போயிங் 777-200 ரக விமானம் நேற்று அதிகாலை புறப்பட்டு 2 மணி நேரத்துக்குள் மாயமானது.
காலை 6.30 மணியளவில் பீஜிங் சென்றடையும் என எதிர்பார்க்கப்பட்ட அந்த விமானம் புறப்பட்டு சென்ற சுமார் 2 மணி நேரத்துக்குள் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்தது.
இதனால் பதற்றமடைந்த கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அந்த விமானம் தொடர்பு எல்லைக்குள் இருந்து மாயமாகி விட்டதாக அறிவித்தனர்.
அந்த விமானத்தில் 2 குழந்தைகள் உள்பட 227 பயணிகள், 12 பணியாளர்கள் என மொத்தம் 239 பேர் இருந்ததாக மலேசியன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த விமானத்தில் பயணித்தவர்களில் சீன நாட்டைச் சேர்ந்த 152 பேரும் மலேசியாவைச் சேர்ந்த 38 பேரும் இந்தோனேசியாவைச் சேர்ந்த 38 பேரும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நால்வரும் பிரான்ஸைச் சேர்ந்த மூவரும் பயணித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குறித்த விமானம் வியட்னாமின் பூ குவாக் தீவிலிருந்து 153 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக வியட்னாம் கடற்படை அதிகாரிகள் நேற்று பிற்பகல் அறிவித்திருந்தனர்.
0 Comments