Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வாழைச்சேனையில் புதிய பாலர் பாசாலை உத்தியோகபூர்வமாக திறந்து வைப்பு...

வாழைச்சேனை கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தினால் பாலர் பாடசாலை வாழைச்சேனை பேத்தாழையில் திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது

 வாழைச்சேனை கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தினால் பேத்தாழை பிரதேசத்தில் பல வருடங்களாக நடாத்தப்பட்டு பின்னர் வாழைச்சேனை பிரதான வீதிக்கு இடமாற்றப்பட்ட இயங்கி வந்த முன்பள்ளியானது மக்களது வேண்டுகோளுக்கு இணங்க பேத்தாழை பிரதேசத்தில் கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின் தலைவர் ஆ.அமிர்தலிங்கம் தலைமையில் மீண்டும் திறந்து வைக்கப்பட்டது

 இந்நிழ்வில் வாழைச்சேனை பரி யோவான் ஆலயத்தின் அருட்திரு.தயாளன், கல்குடா கல்வி வலய முன்பள்ளி பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.நிதிகரன், வாழைச்சேனை உலக தரிசன நிறுவனத்தின் முகாமையாளர் எஸ்.ரோஹாஸ், சிறுவர்களுக்கான திட்ட இணைப்பாளர் எஸ்.ஜக்குலின், கிழக்கு மாகாண சபையின் முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.கயல்விழி வினோதரன், வாழைச்சேனை கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின் நிருவாக சபை உறுப்பினர்கள், முன்பள்ளி சிறார்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

 இவ்முன்பள்ளி கட்டடத்தினை மீள்நிர்மானம் செய்வதற்கு உலக தரிசன நிறுவனத்தினர் நிதி உதவி வழங்கிய குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments