Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கல்முனையில் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்ட மாட்டிறைச்சி, தயிர் அழிப்பு


கல்முனை மாநகர சபை பிரதேசங்களில் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்ட மாட்டிறைச்சி,  தயிர் மற்றும் மாட்டிறைச்சி மூலமான உற்பத்திர்ப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

இன்று திங்கட்கிழமை (03) காலை தொடக்கம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை, நற்பிட்டிமுனை, சாய்ந்தமருது, கல்முனைக்குடி போன்ற பிரதேசங்களில் பொலிஸாரின் உதவுயுடன் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்புத் தேடுதல்களின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது இரண்டு வீடுகளில் மறைமுகமாக விற்கப்பட்ட மாட்டிறைச்சியும் ஒரு இடத்தில் தயிரும் சில உணவகங்களில் மாட்டிறைச்சி மூலம் உற்பத்தி செய்யப்பட்ட உணவுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது குறித்த வியாபாரிகள் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

அதேவேளை கைப்பற்றப்பட இறைச்சி மற்றும் உணவுப் பொருட்கள் கல்முனை மாநகர சபைக்கு கொண்டு வரப்பட்டு  மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம்.மாஹிர் ஆகியோர் முன்னிலையில் மாநகர சபை வளாகத்தில் வைத்து எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டன.

கல்முனை மாநகர சபையின் மிருக வைத்திய அதிகாரி டாக்டர் என்.ஏ.வடடப்போலஇதலைமையில் இடம்பெற்ற இந்த சுற்றிவளைப்புத் தேடுதலில் பொதுச் சுகாதார பரிசோதகர்களான எம்.அரியராஜா,ஜே.எம்.நிஸ்தார், ஏ.எல்.எம்.ஜெலீன், பொலிஸ் அதிகாரிகளான எம்.பி.எம்.முஸ்தபா, எஸ்.ஏ.ஜவாத் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

அரசாங்க வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் கடந்த 27ஆம் திகதி தொடக்கம் கல்முனை மாநகர சபை எல்லைக்குள் ஆடு, மாடுகள் இறைச்சிக்காக அறுப்பது, விற்பனை செய்வது மற்றும் இறைச்சி மூலமான உற்பத்திப் பொருட்களை உணவாகப் பயன்படுத்துதல் என்பன தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


Post a Comment

0 Comments