Home » » மாயமான விமானம்! போலி பாஸ்போர்டில் பயணித்தவரின் விபரங்கள் வெளியானது

மாயமான விமானம்! போலி பாஸ்போர்டில் பயணித்தவரின் விபரங்கள் வெளியானது

மாயமான மலேசிய விமானத்தில், போலி பாஸ்போர்டில் பயணம் செய்த நபரின் விபரங்கள் வெளியாகியுள்ளது.239 பயணிகளுடன் கடந்த 8ம் திகதி அதிகாலை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங் நோக்கிச் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், வியட்நாம் கடல் எல்லைக்கு மேலே பறந்த போது கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்து, திடீரென மாயமானது.
இதுவரையிலும் எவ்வித தடயங்களும் கிடைக்கப் பெறாத நிலையில், 4 பேர் போலி பாஸ்போர்டில் பயணம் செய்தது தெரியவந்தது.எனவே விமானத்தை தீவிரவாதிகள் கடத்தி இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.இந்நிலையில் போலி பாஸ்போர்டில் பயணம் செய்த நபர் ஒருவர் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன.19 வயது ஈரானிய இளைஞரான இந்நபர் ஜேர்மனிக்குள் குடியேற முயன்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
திருடுபோன பயண ஆவணங்களைப் பயன்படுத்தி இந்த விமானத்தில் பயணித்திருந்த இரண்டாவது நபர் பற்றிய விசாரணைகள் தொடர்ந்து வருகின்றன, ஆனால் விவரம் எதுவும் இன்னும் தெரியவரவில்லை.இதற்கிடையே விமானம் தேடப்பட்டுவருகின்ற இடத்தின் பரப்பு விஸ்தரிக்கப்பட்டுள்ளது.கடல் பரப்பில் மட்டுமல்லாது நிலப்பரப்பிலும் மலேசிய அதிகாரிகள் தேடிவருகின்றனர்
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |