சர்வதேச மாற்றத்திறனாழிகள் தின நிகழ்வும் நம்பிக்கை சஞ்சிகை வெளியீடும் வெள்ளிக் கிழமை மண்முனை மேற்கு வவுணதீவப் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலக ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் வெ.தவராஜா தலைமையில் இடம்பெற்ற இ;ந் நிகழ்வில் மாற்றுத் திறனாழிகளின் கலை நிகழ்வுகளும் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட கட்டூரை,கவிதை,ஓவியப் போட்டிகளில் வெற்றியிட்டியவர்களுக்கு பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
கண்டிக் கப் சர்வதேச நிறுவனத்தின் அனுசரணையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வெளியிடப்பட்ட நம்பிக்கை சஞ்சிகையானது மாற்றுத் திறனாழிகளின் ஆக்கங்கள் பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடாத்தப்பட்ட போட்டியில் தெரிவு செய்யப்பட்ட ஆக்கங்களை உள்ளடக்கியதாக உள்ளது.
வவுணதீவுப் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மாற்றுத்திறனாழிகள் பங்குபற்றிய இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு,மாவட்ட சமூக சேவை உத்தியோகஸ்தர் சா.அருள்மொழி,கண்டிக் கப் சர்வதேச நிறுவனத்தின் திட்ட அதிகாரி ரி.கிறிஸ்ரி,வாழ்வகம் அமைப்பின் ஆலோசகர் ரி.கேசவநாதன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.




0 Comments