Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் உணவுச்சாலைகள் சோதனை –பெருமளவான பொருட்கள் அழிப்பு


சுகாதார அமைச்சும்,சுகாதார திணைக்களமும் இணைந்து ஏற்பாடுசெய்துள்ள தேசிய உணவு பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு களுவாஞ்சிகுடி பொதுச்சுகாதார பிரிவில் உணவகங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

களுவாஞ்சிகுடி பிரதேசத்துக்குட்பட்ட பொதுச்சந்தை மற்றும் நகர்ப்பகுதி,பிரதான வீதியை யொட்டிய பகுதிகளில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதார பணிப்பாளர் சாமித்தம்பி இராஜேந்திரனின் வழிகாட்டலின் கீழ் பிரதேச மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் கா.ஜெயரஞ்சன் தலைமையிலான பொதுச்சுகாதார பரிசோதகர் குழுவினர் இந்த சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இதன்போது 30க்கும் மேற்பட்ட உணவகங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் அவற்றில் ஏழு உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதுடன் 10 உணவங்களுக்கு எச்சரிக்கை துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டுள்ளன.

பொதுமக்களின் நன்மை கருதி சுகாதார அமைச்சும்,சுகாதார திணைக்களமும் இணைந்து இரண்டு தினங்கள் இந்த உணவு பாதுகாப்பு வாரத்தினை நடைமுறைப்படுத்தியது.

இதன்போது உணவகங்களில் பணி புரிவோருக்கு சுகாதாரம் தொடர்பில் கருத்துக்கள் வழங்கப்பட்டதுடன் உணவுகளை பாதுகாப்பாக வைத்திருப்பது தொடர்பிலும் விழிப்புணர்வு அழிக்கப்பட்டதாக பிரதேச மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் கா.ஜெயரஞ்சன் தெரிவித்தார்.

மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது சுகாதாரத்துக்கு உகந்த முறையில் இல்லாத பெருமளவான உணவுப்பொருட்கள் மீட்கப்பட்டு அழிக்கப்பட்டதாகவும் தெரிவித்த அவர்,அவற்றின் பெறுமதி சுமார் ஒரு இலட்சத்து 30ஆயிரத்துக்கும் மேல் எனவும் தெரிவித்தார்.







Post a Comment

0 Comments