மன்னார் – திருக்கேதீஸ்வரம் மனித எச்சங்களின் தலைப் பகுதிகள் அருகில்உள்ள கோவிலை நோக்கி புதைக்கப்பட்டுள்ளது.
மன்னார் – திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களில் மண்டையோடுகள் ஒரேதிசையில் புகைப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த தகவலை வெளியிட்டார்.
இதுவரை தோண்டியெடுக்கப்பட்டதாக மனித எச்சங்களின் தலைப் பகுதிகள் அருகில் உள்ள கோவிலை நோக்கி திருப்பியவாரு புதைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போது வரை 55 மனித எச்சங்களும், மண்டையோடுகளும் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த வருடம் டிசம்பர் 23 ஆம் திகதி குறித்த மனித புதைகுழியில் அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
17 தினங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கைகள் கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்ற பணிப்புரைக்கு அமைய அந்த நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
எதிர்வரும் வாரத்தில் விசேட நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில், 20 மீற்றர் நீளம் மற்றும் 12 மீற்றர் அகலவாக்கில் புதைகுழியை விரிவாக்கி அகழ்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த தகவலை அனுராதபுர போதனா மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி தனஞ்ஜய வைத்தியரத்ன வெளியிட்டுள்ளார்.


0 Comments