விமானப்படையின் 14 ஆவது புதிய தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் கோலித்த குணதிலக இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஓய்வு பெறும் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம நேற்று தனது பதவியினை புதிய தளபதியான கோலித்த குணதிலகவிடம் கையளித்ததை தொடர்ந்தே இன்று அவர்உத்தியோகபூர்வமாக பதவியேற்றார்.
நேற்றைய தினம் எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம தனது பதவியை எயார் வைஸ் மார்ஷல் கோலித்த குணதிலகவுக்கு கையளிக்கும் நிகழ்வானது விமானப்படை தலைமையகத்தில் நடைபெற்றது. இதன் போது உத்தியோக பூர்வமாக தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்ட எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம விமானப்படை தலைமை பொறுப்பை எயார் வைஸ் மார்ஷல் கோலித்த குணதிலகவிடம் கையளித்தார்.
2006 ஆம் ஆண்டு விமானப்படையின் கட்டளை தளபதியாக நியமிக்கப்பட்டிருந்த ஹர்ஷ அபேவிக்ரம 2011 ஆம் ஆண்டு பெப்ரவரி 27 ஆம் திகதி விமானப்படையின் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். இந் நிலையிலேயே மூன்றுவருட சேவையின் பின்னர் எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம ஓய்வு பெற்றுக்கொண்டார்.
இதனை அடுத்து புதிய விமானப்படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் கோலித்த குணதிலக இன்று கடமையினை உத்தியோகபூர்வமாக பெறுப்பேற்றுக் கொண்டார்.
இதுவரை விமானப்படையின் தலைமை அதிகாரியாக கடமையாற்றிவந்த நிலையிலேயே எயார் வைஸ் மார்ஷல் கோலித்த குணதிலக தளபதியாக நியமனம் பெற்றுள்ளார்.
கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான கோலித்த குணதிலக பாதுகாப்புக் கல்லூரியினதும் பழைய மாணவராவார். அத்துடன் பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவம் ஆகியவற்றில் எயார் வைஸ் மார்ஷல் கோலித்த குணதிலக முது நிலை பட்டப் படிப்பினைப் பூர்த்தி செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments