அம்பாரை மாவட்டத்தில் தொடரும் அடைமழையினால் அறுவடைக்கு தயாராகவிருந்த அதிக வயல் நிலங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
இம்முறை அதிகமான வயல் நிலங்கள் சிறந்த விளைச்சலைப் பெற்றுக்கொடுத்தபோதும் இறுதி சந்தர்ப்பத்தில் பெய்த அடை மழையினால் பல விவசாயிகள் நஷ்டமடைகின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இறுதி சந்தர்ப்பத்தில் அறுவடை இயந்திரத்தை பெறமுடியாமல் குறித்த காலத்தில் அறுவடை செய்ய இயலாமல் போனதாகவும் கவலை தெரிவித்தனர். அதன் விளைவாக ஏறவிளைந்த வயல் நிலங்களில் பயிர்கள் நிலத்துடன் சாய்ந்துள்ளதால் மீண்டும் முளைவரும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர். தொடரும் அடை மழையினால் வயல்நிலங்கள் மாத்திரமன்றி வீதிகளும் நீர் நிரம்பி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments