சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி ராணுவ கோப்ரல் ஒருவருக்கு 40 வருட கடூழிய சிறைத்தண்டனையை அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
வழக்கு விசாரணையின் போது குற்றவாளியாக இனங்காணப்பட்ட குறித்த ராணுவ கோப்ரல், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு லட்சம் ரூபா நட்ட ஈட்டை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டில் ராணுவ கோப்ரல், குறித்த சிறுமியை இரண்டு முறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக சட்டமாதிபரினால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செல்லப்பட்டிருந்தது.
இதன்படி, இரண்டு குற்றச் செயல்களுக்குமாக தனித்தனியாக 20 வருடங்கள் வீதம் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
0 Comments