சீனாவில் நபர் ஒருவரின் உடலில் இருந்து 42 முத்துக்கள் எடுக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள யியாங் பகுதியை சேர்ந்தவர் ஷோயூ(வயது 61).
இவர் கடந்த 2011ம் ஆண்டு முதல் முதுகு மற்றும் கால் வலியால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்ததால், இவரின் நண்பர் மருத்துவரிடம் அழைத்து சென்றுள்ளார்.
மருத்துவர் பரிசோதித்து பார்த்து, தோலுக்கு அடியில் முத்துக்களை பதித்து வைத்தால் வலியில் இருந்து நிவாரணம் பெறலாம் என தெரிவித்திருக்கிறார்.
அதன்படி வலி ஏற்பட்ட இடுப்பு மற்றும் காலில் முத்துக்களை செருகி வைத்தார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் ஷோயூக்கு தாங்க முடியாத அளவில் மீண்டும் வலி ஏற்பட்டு, நடக்கமுடியாமல் போனது.
இதனை தொடர்ந்து சாங்ஷாவில் உள்ள மற்றொரு மருத்துவரிடம் சென்றுள்ளார், அவர் உடலுக்குள் புதைத்து வைத்திருந்த 42 முத்துக்களை ஆபரேசன் மூலம் அகற்றினார்.
உடலில் முத்துக்களை பதித்ததால் எலும்புகளுக்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு அவரால் நடக்க முடியாமல் இருந்தது.
தற்போது ஆபரேசனுக்கு பிறகு ஷோயூ பூரண குணமடைந்து விட்டார்.
0 Comments