Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் மீன் வியாபாரிகளுக்கிடையில் வாள்வெட்டு

மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைத்தீவு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரண்டு மீன் வியாபாரிகளுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கத்திக்குத்தில் முடிந்துள்ளதுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக மீன் வியாபாரி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
களுதாவளையை சேர்ந்த இரண்டு மீன் வியாபாரிகளுக்கு இடையில் அடிக்கடி முரண்பாடுகள் ஏற்பட்டுவந்துள்ளது.மீன் விற்பனையில் ஏற்பட்ட போட்டியே இந்த முரண்பாட்டை தோற்றுவித்துள்ளது.
இந்த நிலையில் மீன் விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவரும் முனைத்தீவு பகுதியில் இருவரும் நேருக் நேர் சந்தித்துள்ள நிலையில் இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் கத்துக்குத்துக்கு சென்றுள்ளது.இதன்போது களுதாவளை சாந்திபுரத்தினை சேர்ந்த உருத்திரமூர்த்தி என்பவர் கத்திக்குத்துக்கிலக்கான நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மற்றைய மீன்வியாபாரியான களுதாவளை,ஸ்ரீமுருகன் ஆலய வீதியை சேர்ந்த சண்முகம் கோபாலபிள்ளை கைதுசெய்யப்பட்டு களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பிலான விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Post a Comment

0 Comments