Advertisement

Responsive Advertisement

மூன்று குழந்தைகள் ஒன்றாக பிறந்ததால் வீட்டுக்கு வர மறுக்கும் பெண்

அமெரிக்காவின் பென்சில்வேனியா அருகேயுள்ள அபிங்டன் நகர ஆஸ்பத்திரியில் பிரசவித்த ஒரு பெண் வீடு திரும்பும் நாள் நெருங்குவதை அறிந்து கலக்கம் அடைந்துள்ளார். சாதாரணமாக வயிற்றில் குழந்தையை சுமந்தபடி, பிரசவத்துக்காக ஆஸ்பத்திரிக்கு செல்லும் கர்ப்பிணி பெண்கள், பெற்ற குழந்தையை கையில் ஏந்தியபடி வீட்டுக்குள் நுழையும் அந்த முதல் அனுபவத்துக்காக கற்பனைகளிலும், கனவுகளிலும் மிதந்தபடி மாதக்கணக்கில் காத்துக் கிடப்பதுண்டு. ஆனால், அபிங்டன் மெமோரியல் ஆஸ்பத்திரியில் கடந்த 5-ம் தேதி அடுத்தடுத்து 3 அழகிய பெண் குழந்தைகளை பிரசவித்த அலிசன் ரோவா விரைவில் டிஸ்சார்ஜ் ஆக உள்ளார். பிரசவத்துக்கு முன் தினம் வரை ஓடியாடி வீட்டில் உள்ள அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்த அலிசன் ரோவா, தற்போது வீடு திரும்பிய பிறகு 3 குழந்தைகளையும் பராமரிக்க என்ன பாடுபட வேண்டியிருக்குமோ…?

என கலக்கமடைந்துள்ளார். ஒரு லட்சம் பெண்களில் ஒருவருக்குதான் இதைப்போல ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு உள்ளது என்பது விந்தையான விஷயம் தான் என்ற பாராட்டு மழையில் அலிசன் ரோவா நனைந்து வருகிறார்.

எனினும், முதல் முறை தாயாகியுள்ள இவர், மூன்றாவது குழந்தைக்கு பாலூட்டி முடித்த அடுத்த 15-வது நிமிடத்தில் மீண்டும் முதல் குழந்தைக்கு பாலூட்டத் தொடங்கும் புதிய அனுபவத்துடன், இவர்களின் இதர தேவைகளையும் எப்படி நிறைவேற்றுவது? என்பதைப் பற்றி இடைவிடாது சிந்தித்துக் கொண்டிருக்கிறார். –

Post a Comment

0 Comments