மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழூர் 110 B கிராமத்தில் பாம்பு தீண்டியதாக சந்தேகிக்கப்படும் யாழ். பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட மாணவியான கங்காதரன் மாதுமி (வயது 22) என்பவர் வியாழக்கிழமை (27) அதிகாலை உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார். களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே இவர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறினார். இவரின் சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
0 Comments