பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் அவர்களினால் திருகோணமலை ஆற்றுடன் கலக்கும் மகாவலி நதியினை கிண்ணியா, கந்தளாய் வயல் பிரதேசங்ளுக்கு திருப்புதற்கான முன்னெடுப்புக்கள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றது
இதன் முதற் கட்டமாக சாத்தியக் கூற்று அறிக்கையினை சம்பந்தப்பட்ட அரச திணைக்களத்திற்கும் , அமைச்சுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு தற்போது நதியினை திருப்புதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இவ் நதியினை திருப்புதற்கு 600 கோடி ரூபாய்கள் செலவாகும் என மதிப்பீடும் செய்யப்பட்டுள்ளது.
இவ் நதியினை திருப்புவதன் மூலம் கிண்ணியா கந்தளாய் பிரதேசத்தில் மூன்று போகமும் நெல் பயிரிடப்படும் நிலை தோன்றும் மேலும் விவசாயத்தினை நம்பியிருக்கின்ற விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர்வடையவும், பல கிராமங்களில் காணப்படும் தொழில் வாய்ப்பின்மை நீங்கவும் வாழிவகுக்கும் மற்றும் மகாவலி நதியின் மூலம் ஏற்படுகின்ற வெள்ளப் பெருக்கில் இருந்து பல பிரதேசங்களை பாதுகாக்கவும் முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.
0 Comments