ஜேர்மனியில் ஓட்டுநரின் அலட்சியத்தால் வீடொன்று அப்பளமாக நொறுங்கிய சம்பவம் நடந்துள்ளது.ஜேர்மனை சேர்ந்த 57 வயது நிரம்பிய டிரக் ஓட்டுநர் ஒருவர் ஹீம்பாச்சி நகரத்திலிருந்து ஹெர்காடென் செல்லும் நெடுஞ்சாலையில் டிரக்கை ஓட்டி சென்றுள்ளார்.அப்போது அவர் பயணித்த பாதையில் வளைவு இருந்ததால் எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்பு வீடு ஒன்றின் மீது மோதியுள்ளார்.
இதில் அவ்வீட்டின் ஓரப்பகுதியில் இருக்கும் அறை ஒன்று தரைமட்டமானது மட்டுமல்லாமல் அருகே இருந்த மற்றொரு வீடும் பலத்த சேதமடைந்துள்ளது.இந்நிலையில் படுகாயமடைந்த ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.இச்சம்பவம் நடந்த போது வீட்டின் சொந்தக்காரர் வெளியே சென்றிருந்த காரணத்தால், மாபெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


0 Comments