எகிப்து நாட்டில் Sinai peninsula என்ற நகரில் தென்கொரிய சுற்றுலா பயணிகள் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றின் மீது கார் வெடிகுண்டு மோதியதால் ஏற்பட்ட குண்டுவெடிப்பில், பேருந்து டிரைவர் உள்பட நான்கு பேரு உடல்சிதறி பரிதாபமாக பலியாகினர். மேலும் இந்த குண்டுவெடிப்பில் 13 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த பேருந்து எகிப்தி இருந்து இஸ்ரேலை நோக்கி சென்று கொண்டிருந்தபோது தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளானது. பேருந்து Sinai peninsula சாலையில் சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்த வெடிகுண்டுகளுடன் உடைய கார் நேருக்கு நேர் மோதியதாக இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். இந்த பேருந்தை எகிப்து நாட்டை சேர்ந்தவர் ஓட்டிச்சென்றார்.
இந்த குண்டுவெடிப்பு குறித்து விசாரணை செய்ய எகிப்து பிரதமர் உத்தரவிட்டுள்ளார். தென்கொரிய அரசு இந்த குண்டுவெடிப்பிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுவரை எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் இந்த குண்டுவெடிப்பிற்கு பொறுப்பேற்கவில்லை.
0 Comments