பதுல்லா: ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் தொடக்க லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் பாகிஸ்தானை இலங்கை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பதுல்லா, கான் சாகேப் ஆஸ்மான் அலி ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் திரிமன்னே சதம் அடித்து அசத்தினார். 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய பாகிஸ்தான் அணி 48.5 ஓவர்களில் 284 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோற்றது. பாகிஸ்தான் அணியில் கேப்டன் மிஸ்பா உல் ஹக் மற்றும் உமர் அக்மல் ஆகியோர் மட்டுமே அரைசதம் அடித்தனர். மற்ற வீரர்கள் ரன் குவிக்க தவறிவிட்டனர். இறுதியில் பாகிஸ்தான் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையிடம் வீழ்ந்தது. இலங்கை அணி மலிங்கா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
0 Comments