Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

புற்றுநோய் பரிசோதனை சாதனத்தைக் கண்டுபிடித்துள்ள தேசியப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்

சிங்கப்­பூர் தேசியப் பல்­கலைக்­க­ழ­கத்தைச் (என்­யு­எஸ்) சேர்ந்த ஆய்­வா­ளர்­கள் புற்­று­நோய் இருப்­பதை எளிதில் கண்ட­றி­யும் வகையில் புதிய பரி­சோ­தனைச் சாத­னத்தைக் கண்­டு­பி­டித்­துள்­ள­னர். புதிய பரி­சோ­தனை முறைப்படி, சாதனம் நோயா­ளி­யின் உட­லுக்­குள் புகுத்­தப்­படும். திசுக்­களைச் சாதனம் தொட்­ட­வு­டன் அவற்­றில் புற்­று­நோய் அணுக்­கள் உள்­ள­னவா என அடை­யா­ளம் காணப்­படும்.
எனவே, திசுக்­களை வெளியே எடுத்து பரி­சோ­திக்கத் தேவை­இல்லை. இதன் விளைவாகப் புற்­று­நோய் அணுக்­கள் வெளிப்­படு­வதற்கு முன்­ன­தா­கவே நோயா­ளி­களை நெருக்­கும் ஆபத்து குறித்து எச்­ச­ரிக்கை விடுக்கப் புதிய சாதனம் வகை செய்­கிறது. சாதனம் எப்படி செயல்­படு­கிறது என்­பதைக் கண்ட­றிய தற்போது 500க்கும் மேற்­பட்ட நோயா­ளி­களுக்கு அதைக் கொண்டு மருத்­து­வப் பரி­சோ­தனை நடத்­தப்­பட்­டுள்­ளது.

Post a Comment

0 Comments