பொகவந்தலாவவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவை மோரா கீழ்பிரிவு தோட்டத்தில் 17வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த சிறுமி தனது சித்தப்பா வீட்டில் யாரும் இல்லாத வேலையில் தனது தாயின் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சிறுமி ஹட்டன் பிரதேசத்தில் மகளிர் பாடசாலையில் கல்வி கற்று, கல்வி பொதுதாரதர சாதாரண தர பரீட்சை எழுதி தனது பேறுபேற்றுக்காக எதிர்பார்த்து இருந்தமை குறிப்பிடதக்கது.
தற்கொலை செய்து கொண்டுள்ள சிறுமி சிவபாலன் ஜனுசா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மாத்தரை தெனியாய பிரதேசத்தில் உறவினரான இளைஞன் ஒருவரோடு காதல் தொடர்பு காரணமாக இந்த தற்கொலை நேர்ந்திருக்கலாம் எனவும் சிறுமியின் கை யெழுத்தினால் எழுதபட்ட டயரி ஒன்றை மீட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை கஹவத்த பிரதேசத்திலும் 27 வயது இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வீரப்புலி சேவாகே ரோஷான் என்ற இந்த இளைஞன் நேற்று (13) தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளது.
குடும்ப பிரச்சினை காரணமாக இவ் இளைஞன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸாரது விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கதிர்காகமம் - திஸ்ஸமகாராம பிரதான வீதியின் காட்டுப் பிரதேசத்தில் நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பொலிஸ் அவசர அழைப்பு பிரிவுக்கு நேற்று (13) மாலை கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து இந்நபரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்நரது சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
சடலம் பொலிஸ் பாதுகாப்பில் சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதுடன் சடலம் மீதான நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.
0 Comments