உத்தரப் பிரதேசத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் 17வயது மாணவன் ஒருவன் , 50 வயது பெண்ணை காதலித்து வருவதுடன், அந்தப் பெண்மணியையே திருமணம் செய்வேன் என பிடிவாதமும் பிடித்து வருகிறானாம்.
இதனால் அந்த பையனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். மீரட்டைச் சேர்ந்த அந்த மாணவன் காதலியை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி போலீசில் புகார் மனு ஒன்றையும் கொடுத்துள்ளான்.
அதில், ‘நான் 50 வயதாகும் பெண் ஒருவரை காதலிக்கிறேன்; அவருடன் ஆறு மாதங்களாக நெருங்கிப் பழகி வருகிறேன்; அவரையே மணக்க விரும்புகிறேன்; அதற்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்; எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்’ என்று அவன் தெரிவித்திருந்தான்.
மனுவை படித்த போலீசார், அதிர்ச்சி அடைந்தனர். அந்தப் பெண்ணை அழைத்து விசாரித்தனர். எட்டு குழந்தைகளுக்கு தாயான அந்தப் பெண், ”வாழ்ந்தால், இவரோடு தான் வாழ்வேன்; இல்லையேல், இருவரும் சேர்ந்தே தற்கொலை செய்து கொள்வோம்,” என்றார்.
எனினும், அதை ஏற்றுக் கொள்ளாத அப்பெண், கோபத்தில் போலீஸ் நிலையத்திலிருந்து வெளியேறினார்.அங்கு கூடியிருந்த, மாணவனின் உறவினர்கள் அந்த பெண்ணை நையப்புடைத்தனர். போலீசார் தலையிட்டு அவரை அந்த கும்பலிடம் இருந்து மீட்டனர்.
‘திருமண வயதாகும் வரை காத்திருப்போம்’ என, கூறியுள்ள காதலர்களுக்கு, போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
0 Comments