Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிரந்தர வெள்ள அணை அமைக்க நடவடிக்கை


மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் இடங்களில் நிரந்தர தடுப்பு அணை அமைப்பதற்காக  1100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்Pடு செய்ப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குமாரவேலியார் கிராமத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதை தடுப்பதற்கான நிரந்தர அணை அமைப்பது தொடர்பாக கிராம அபிவிருத்திச் சங்க கட்டடத்தில் நடைபெற்ற விஷேட கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.

கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் மு.யோகராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் திருமதி பேரின்பமலர் மனோகரதாஸ், மீள்குடியேற்ற அதிகார சபை பணிப்பாளர் கே.சத்தியவரதன், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் டி.எம்.சந்திரபால கிராம சேவகர்களான ஆர். சிறிதரன், கே.வாமதேவன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பிரதியமைச்சர் முரளிதரன் இங்கு தொடரந்து உரையாற்றுகையில்

“2010 ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட பாரிய வெள்ளப் பெருக்கு காரணமாக எமது பிரதேச மக்கள்  பல இன்னல்களை எதிர்நோக்கியதை நான் நேரடியாக வந்து பார்வையிட்டு உயர்மட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்ததன் காரணமாக இன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 1100 மில்லியன் ரூபா நிதி நிரந்தர வெள்ள தடுப்பு அணை அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அணை அமைக்கும் பணிகள் அடுத்த மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளது.

அரசாங்கத்தின் பங்காளியாக இருப்பதன் காரணமாகவே இவ்வாறான வளங்களை என்னால் கொண்டுவரக் கூடியதாகவுள்ளது. நாங்கள் வளங்களை பெற்று பயன்பெறுவதோடு நின்றுவிடாமல் பங்களாளிகளாக மாற வேண்டும். நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிப்பதன் மூலம் எந்தவித அபிவிருத்தியையும் பெற முடியாது. அவர்கள் பாராளுமன்றமோ மாகாண சபைக்கோ சென்று கூச்சலிடுவதைத்த தவிர எதுவும் செய்யப்போவதில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 73 சதவீதம் தமிழ் வாக்குகள் உள்ளபோதிலும் மாகாண சபையில் ஒரு அமைச்சரைக் கூட அனுப்ப முடிவில்லை இது எமது மக்கள் விட்ட பாரிய தவறு. முஸ்லிம்கள் அரசியல் பலத்தை சரியாக பயன்படுத்தி அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்று அவர்களது பிரதேசங்களை அபிவிருத்தி செய்கின்றனர். எமது மாகாண சபை உறுப்பினர்கள் எதிர்கட்சி ஆசணத்திலிருந்து கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் கூட ஜனாதிபதி மஹிந்த ராஜப்ஷவிற்கு எமது மக்கள் வாக்களிக்கவில்லை. மாகாண சபைத் தேர்தலில் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கே வாக்களித்தீகள். தமிழ் மக்கள் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட்ட எமது பிரதிநிதிகளை மாகாண சபைக்கு அனுப்பியிருந்தால் எமது பிரதேசங்களுக்கு பாரிய அபிவிருத்திகள் நேரடியாக கொண்டுவரக் கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கும். எமது மக்கள் வாக்களிக்காத போதிலும் அரசாங்கம் அபிவிருத்திக்காக பல கோடி ரூபாக்களை எமது பிரதேசங்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது.

யுத்த சூழ்நிலை முடிவடைந்த பின்னர் எமது மாவட்டம் தற்போது சகல துறைகளிலும் பாரிய அபிவிருத்தியடைந்து வருகின்றது இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் மிகதிருப்திகரமாகவுள்ளது 21 போர் மருத்துவத்துறைக்கு தெரிவாகியுள்ளனர் இது எமது மாவட்டத்துக்கு கிடைத்த பாரிய வெற்றி” என்றார்.



Post a Comment

0 Comments