சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு ஒன்பது ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நினைவு கூரும் நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் மட்டக்களப்பு குருக்கள்மடம் பகுதியில் சுனாமிப் பேரலையின் அனர்த்தம் காரணமாக உயிர் நீத்த ஒன்பது பேருக்கு நினைவு கூர்ந்து அவர்களின் திருவுருவப் படங்களுக்கு தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.
|
இதன்போது உயிர் நீர்த்தவர்களின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு பூசைகள் மற்றும் உணர்வுபூர்வமான கண்ணீர் மழ்கி அஞ்சலிகளை செலுத்தித்தினர். மட்டக்களப்பு குருக்கள்மடம் கடற்கரை பகுதியில் இவர்களுக்கான தூபி அமைக்கப்பட்டு இது புனித பூமியாக 2005.12.26ம் திகதி அன்று பிரகனடப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஆழிப்பேரலையில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து வியாழக்கிழமை காலை 9.25 முதல் 9.27 வரையான இரண்டு நிமிட நேரம் மக்கள் மௌனம் அனுஷ்டித்து நினைவஞ்சலி செலுத்துகின்றனர்.
![]() |
0 Comments