நாடு முழுவதிலும் 65 ஆயிரம் போலி தேசிய அடையாள அட்டைகள் உலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மைய உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது வெளியிடப்பட்ட அடையாள அட்டைகளில் பல போலியானவை. இவற்றில் உள்ளடக்கப்பட்ட தகவல்கள் பிழையானவை என ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் ஆர்.எம்.எஸ். சரத் குமார தெரிவித்துள்ளார். எனது அடையாள அட்டை சரியானதா என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. தற்போது பாவனையில் உள்ள தேசிய அடையாள அட்டைகள் தரமற்றவை. நீண்ட காலம் பயன்படுத்தவும் முடியாது. பல்வேறு தகவல்கள் உள்ளடக்கப்படவில்லை என்றார். இதேவேளை, 2016ம் ஆண்டு முதல் நவீன இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகம் செய்யப்பட உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
|
மொனராகல மாவட்ட செயலாளர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்களை தெளிவுபடுத்தும் நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
|
0 Comments