Home » » திருக்கோவில் – வட்டமடு பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பாளர்கள் உண்ணாவிரதத்தில்

திருக்கோவில் – வட்டமடு பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பாளர்கள் உண்ணாவிரதத்தில்

திருக்கோவில் – வட்டமடு பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பாளர்கள் இன்று காலையில் இருந்து சாகும்வரை உண்ணாவிரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் கால்நடைகளுக்கான மேச்சல் தரையாக 1976ம் ஆண்டு அரசாங்கத்தினால் திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள வட்டமடு பிரதேசத்தில் 4 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது.
கால்நடை வளர்ப்பாளர்கள் அதனுள் கால்நடைகளை வளர்த்து வந்தனர் பின்னர் நாட்டில் ஏற்பட்ட யுத்ததினால் அவர்களால் அங்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
பின்னர் இங்கு காணிச் சட்டத்திற்கு முரணாக போலி தற்காலிக காணிப் பத்திரத்தை பெற்று விவசாயிகள் அத்தமீறி வேளாண்மை செய்துவந்துள்ளனர்.
தற்போது ஏற்பட்டுள்ள சமாதான சூழலில் கால்நடையாளர்கள் தங்களது கால்நடைகளை மேச்சல் தரைக்கு கொண்டு சென்றபோது அதன் நிலப்பரப்பில் அத்துமீறி விவசாயிகள் வேளாண்மை செய்துவந்தனர்.
கடந்த மாதம் 19 ம் திகதி திருகோணமலை அரசாங்க அதிபர் காரியாலத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களின் கால்நடைகளுக்கான மேச்சல் தரை தொடர்பாக அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தலைமையில் கலந்துரையாடல் ஓன்று இடம்பெற்றது
இதில் அமைச்சர்களான அதாவுல்லா, ரவூப்ஹகீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது விசேடமாக அம்பாறை வட்டமடு மேச்சல்தரை பிரச்சினை கலந்துரையாடப்பட்டது. 
மேலும், இது ஒரு கலந்துரையாடல் எனுவும் இதற்கான தீர்வு இங்க வழங்கப்பட மாட்டாது எனவும், வட்டமடு மேச்சல் தரை தொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டு அந்த குழு கலநிலவரங்களை பார்வையிட்டு அதன் பின்னர் அமபாறை கச்சேரியில் கலந்துரையாடல் நடைபெற்று பின்னர் தீர்வு காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு தீர்மானிக்கப்பட்ட பின்னர் வட்டமடு மேச்சல் தரை பிரதேசத்தில் 1380 ஏக்கர் நிலப்பரப்பில் வேளாண்மை செய்வதற்கு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் அனுமதி வழங்குமாறு வனபரிபாலன சபையின் தலைவருக்கு பணிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
இவ் அனுமதியானது ஒருதலைப்பட்சமானது என கண்டித்து ஆலைடிவேம்பு, திருக்கோவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை பிரதேச கால்நடை வளர்ப்பு சங்கங்கத்தினர், இதனை மீள்பரீசிலனை செய்யவேண்டும் எனவும் இல்லாவிடில் 40 ஆயிரம் கால்நடைகளை அரசு பெறுப்பேற்று கால்நடையாளர்களுக்கு நஷ்டஈட்டை வழங்க வேண்டும் எனவும் கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இவ் உண்ணாவிரத போராட்டத்தில் மஹிந்த சிந்தனையில் பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டபோதும் இத் தீர்மானத்துக்கு மாறாக அம்பாறை மாவட்டத்தில் பால் உற்பத்தி மழுங்கடிக்கப்படுகின்றது, வட்டமடு மேச்சல் தரையில் நீதி நித்திரை கொள்கின்றதா, போன்ற சுலோகங்கள் தாங்கழியவாறு 50க்கும் மேற்பட்டோர் இன்று காலை 6.00 மணியில் இருந்து போராட்டத்தை ஆரம்பித்து ஈடுபட்டுவருகின்றனர்.
இதேவேளை விவசாயிகள், வோளாண்மை செய்வதற்கு வனபரிபாலனசபை அனுமதி வழங்கியுள்ள நிலையில், கால்நடை வளர்ப்பாளர்கள் தங்களை வேளாண்மை செய்ய விடாது தடுத்துவருவதாக திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |