மட்டக்களப்பின் சில பகுதிகளில் 08.12.2013 பிற்பகல் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாக மக்கள் அச்ச நிலைக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நாவலடிப்பகுதியில் கடல் அலைகள் நீண்டதூரம் வந்ததன் காரணமாக பெரும் அச்ச நிலையேற்பட்டுள்ளது.
இதன்போது மீனவர்களின் இரண்டு மீன் வாடிகளும் சேதமடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கடற் தொழில் திணைக்கள உதவி பணிப்பாளர் ஜோர்ஜ் தெரிவித்தார்.
கடல் அலைகள் நீண்ட தூரம் வந்ததன் காரணமாக இந்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் அச்ச நிலைக்குள்ளானதாகவும் அவர் தெரிவித்தார்.
கடல் தற்போது கொந்தளிப்பு நிலையில் இருப்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளைமூதூர் கடலில் 08-12-2013 இன்று காலை 7 மணியியளவில் ஆழ்கடலில் மீன் பிடிக்காக விடப்பட்ட வளையை மீட்டு வருவதற்கு தோணியில் சென்ற 3 மீனவர்கள் கடல்கொந்தளிப்பால் ஏற்பட்ட அலைகளில் சிக்கி தோணி கவிழ்ந்ததில் சுமார் 1மணித்தியாலமாக கடலுக்குல் சிக்கி கடுமையான போராட்டத்தின் பின் நீந்தி கரைசேர்ந்துள்ளனர்.
0 Comments