பதுரலிய பொலிஸ் பிரிவின் மொரபிடிய பிரதேசத்தில் மதுபோதையில் அடித்த கணவனை, மனைவி கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தில், மொரபிடிய பகுதியைச் சேர்ந்த 47 வயதான ஒருவரே கொல்லப்பட்டுள்ளார். நேற்று இரவு குடித்துவிட்டு மனைவியுடன் மோதலில் ஈடுபட்ட இவர், போதையில் மனைவியை தாக்கியுள்ளார். இதன்போது, மனைவி கத்தியால் கணவனை குத்தி கொன்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் கொல்லப்பட்டவரின் மனைவியான 50 வயதுடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் இன்று மதுகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 Comments