திருப்பழுகாமம் விபுலானந்த வித்தியாலயத்தில் இவ்வருடம் புலமைப்பரிசிலில் சித்திபெற்ற மாணவர்களில் சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் அங்கத்துவரான மதியளகன் அவர்களின் புதல்வி ம.டிலக்ஷி அவர்கள் சித்தியடைந்திருந்தார். அவருக்கான விருதினை சமூக அபிவிருத்தி ஒன்றியம் சார்பாக தலைவர் எம்.ஜெயராஜா அவர்கள் திருப்பழுகாமத்தில் உள்ள நிறுவனத்தின தலைமையகத்தில் வழங்கி கௌரவித்தார் எமது சமூகத்தின் மாணவர்களின் கல்வி அபிவிருத்தியை விருத்தி செய்யவும், வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு உதவிடும் நோக்கில் ஆரம்பிக்ப்பட்ட எமது அமைப்பின் ஒரு ஊக்கிவிப்பு நிகழ்வாகவே இது நடைபெற்றது என்று அதன் தலைவர் எம்.ஜெயராஜா தெரிவித்தார்.
0 Comments