பெரியகல்லாறு மெதடிஸ்த சபையின் ஏஞ்சல் பாலர் பாடசாலையின் சிறுவர் பட்டமளிப்பும், கலைநிகழ்வுகளும் மற்றும் பரிசளிப்பும் 08.12.2013 மாலை மெதடிஸ்த சமூக மண்டபத்தில் முகாமைக்குரு அருட்திரு எஸ்.சசிகுமார் தலைமையில் நடைபெற்றது. முகாமைக்குரு, பிரதமவிருந்தினர் ஏன்சிஎம் லங்கா திட்ட உத்தியோகத்தர் ஆர்.அன்ரன் ஜோன், ஓசன் ஸ்ரார் பணிப்பாளர் ரி.தர்மராஜன், வை.எம்சி.ஏ தலைவர் கே.டி.கோகுலராஜ் ஆகிய அதிதிகள் மங்கல விளக்கேற்றி வைத்து பரிசில்களையும் வழங்கி வைத்ததுடன் விசேட அதிதி கல்முனை கல்லாறு சேகர முகாமைக் குரு அருட்திரு ஜே.டவிள்யூ.யோகராஜா மற்றும் கிராம உத்தியோகத்தர் எஸ்.இராதாகிருஸ்ணன், அருட்திரு எஸ்.உதயகுமார், ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியை திருமதி ஐ.ஆர்.லூயிஸ் தபாலதிபர் ஜுலியன், சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.கே.ரவீந்திரன் மற்றும் பிரமுகர்கள் மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைப்பதையும் பட்டமளிக்கப்பட்ட மாணவர்களும் ஏனைய மாணவர்களும் ஆசிரியைகளுடனும் பெற்றோருடனும் காணப்படுவதையும் படங்களில் காணலாம்.
0 Comments