கோறளைப் பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் சர்வதேச சிறுவர் தினம் 09.12.2013 கிரான் ரெஜி மண்டபத்தில் கோறளைப் பற்று தெற்கு பிரதேச செயலளர் எஸ். தனபாலசுந்தரம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரும் , மாகாண சபை உறுப்பினரும், ஜனாதிபதியின் ஆலோசகருமாகிய சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
சிறப்பு அதிதியாக கோட்டக் கல்வி அதிகாரி என்.குணலிங்கம் அவர்கள கலந்துகொண்டதுடன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டார்கள். நிகழ்வின்போது வித்து எனும் சஞ்சிகையும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

0 Comments