Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அக்கரைப்பற்று சின்னமுகத்துவாரம் கடலில் தத்தளித்த மூன்று மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு

அக்கரைப்பற்று சின்னமுகத்துவாரம் கடல் பகுதியில் இன்று அதிகாலை தத்தளித்துக்கொண்டிருந்த மூன்று மீனவர்கள் கடற்படையினரின் உதவியோடு காப்பற்றப்பட்டனர்.

காப்பாற்றப்பட்ட மூவரும் அட்டாளைச்சேனை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவருகின்றது.



அட்டாளைச்சேனை -12 பிரிவைச் சேர்ந்த எப்.றிஸ்கான் சிறுகாயங்களுடனும் ,எம்.பசில்,எ.நிப்தார் ஆகிய மூவருமே காப்பாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் பயணம் செய்த சேதனா எனும் பெயருடைய மீன்பிடிப்படகு அதிகாலை அளவில் விபத்துக்குள்ளாகியது. 


விபத்துக்குள்ளான படகில் இருந்த மூவரும் சைகை செய்வதனை அவதானித்த அக்கரைப்பற்று இராணுவத்தினர் துரிதமாக செயற்பட்டு கடற்படையினருக்கு கொடுத்த தகவலின்படி விரைந்து வந்த கடற்படையினர் விபத்துக்குள்ளான படகிலிருந்த மூவரையும் காப்பாற்றியுள்ளனர். 



படகின் உரிமையாளர் கல்முனையை சேர்ந்தவர் எனவும் ஒலுவில் துறைமுகத்திலிருந்து நேற்றைய ;தினம் மாலை 6மணியளவில் புறப்பட்டுள்ளனர் எனவும் தெரியவருகிறது. நேற்று அதிகாலை 6மணியளவில் விபத்து நடந்தபோதிலும் காலை 9.45மணியளவில் காப்பற்றப்பட்டுள்ளனர்.

  
காப்பற்றப்பட்ட மூவரும் ஒலுவில் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மூவரும் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 


Post a Comment

0 Comments