காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி பிரதேசத்ததைச் சேர்ந்த பாடசாலை மாணவியொருவரை செவ்வாய்க்கிழமை தொடக்கம் காணவில்லையென காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.
காத்தான்குடி முதலாம் குறிச்சியைச் சேர்ந்த 14 வயதான மாணவி செவ்வாய்க்கிழமை காத்தான்குடியிலுள்ள பிரத்தியேக வகுப்பு ஒன்றுக்கு சென்றதாகவும் பின்னர் குறித்த மாணவி வீடு திரும்பவில்லை எனவும் அம் மாணவியின் உறவினர் ஒருவரினால் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை நடாத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

.jpg)
0 Comments