கிழக்கு மக்களின் தேவைகள் தொடர்பில் தாம் முன்வைக்கும் வேண்டுகோள்களை நிறைவேற்றித்தரும் அமைச்சர்கள், அரச அதிகாரிகளுக்கு நன்றிகளைத் தெரிவிப்பதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எம். பி. பொன் செல்வராஜா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் அரசாங்கம் பல்வேறு குடிநீர்த்திட்டங்களை நடைமுறைப்படுத்திவருகிறது எனத் தெரிவித்தஅவர், அண்மையில் வவுணதீவு பகுதியிலும் ஜனாதிபதியினால் பாரிய குடிநீர்த்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது என குறிப்பிட்டார்.
எனினும் இத்திட்டங்கள் மூலம் நகர்ப்புற மக்களே பயன்பெற்று வருவதாகத் தெரிவத்த அவர் பெரும்பாலான கிராமங்கள் குடிநீர்த் தேவையை எதிர்நோக்கியதாகவே தொடர்ந்து இருந்து வருவதாகவும் தெரிவித்தார்.
நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய பொன். செல்வராசா எம். பி. தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:-
வடக்கு, கிழக்கில் பெருமளவிலான பிரதேசங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில் பல பிரதேசங்களுக்கு குடிநீர் இதுவரை வழங்கப்படவில்லை.
சில கிராமங்களில் மக்கள் வெகுதூரம் சென்றே குடிதண்ணீரைப் பெற வேண்டியுள்ளது. இப்பிரதேசங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments