இன்று சர்வதேச மனித உரிமைகள் தினமாகும். வியட்னாம் பிரகடனத்தின் கீழ் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஏற்றுக் கொண்டு 20 வருடங்கள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில் மனித உரிமைகள் தினம் அனுஷ்டிக்கப்படுவதாக ஐ.நா செயலாளர் நாயகம் பான்கீ மூன் விடுத்திருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு தசாப்த காலத்தில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கீழ் மனித உரிமைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச ரீதியில் மனித உரிமைகளை உறுதிப்படுத்த இதுவரை 5 ஆணையாளர்கள் திறம்பட செயற்பட்டுள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
உறுப்பு நாடுகளிடையே மனித உரிமைகளை ஊக்குவித்தல் ஐ.நா மனித உரிமைகள் ஆனைக்குழுவின் பிரதான செயற்பாடாகவுள்ளது. மனித உரிமைகள் தினமான இன்று வியட்னாம் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களை முழுமையாக செயற்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன். மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா செயலாளர் நாயகம் அலுவலகம் உள்ளிட்ட ஐ.நா அமைப்பு கண்காணித்து வருகிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம், மனிதஉரிமை பாதுகாப்புக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த நெல்சன் மண்டேலாவுக்கு இந்த நேரத்தில் மரியாதையைச் செலுத்திக் கொள்கின்றேன் என்றும் ஐ.நா செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
|
0 Comments