Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பூந்தொட்டிக்குள் மறைந்து ரணிலின் அலுவலகத்துக்குள் ஊடுருவியதாம் பாம்பு! - விசாரணைக்குழு கண்டறிந்தது.

பாராளுமன்றத்தினுள் கொண்டு வரப்பட்ட பூந்தொட்டியிலிருந்தே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்தினுள் பாம்பு நுழைந்துள்ளது என விசாரணைக்குழு பாராளுமன்ற செயலருக்கு அறிவித்துள்ளது. கடந்த 21ம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்தில் பாம்பு நுழைந்தமை தொடர்பாக விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவே பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. பாராளுமன்ற செயலாளர் நாயகம் 6 பேர் கொண்ட குழுவொன்றை மேற்படி சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்காக நியமித்திருந்தார்.
இக்குழுவினர் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திலிருந்து சிற்றூழியர் உட்பட 6 பேரிடமிருந்து சாட்சியங்களை பதிவு செய்திருந்தது. இவர்களது காட்சியங்களின் படி எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகம் எம்.எஸ்.ரி. பீ.எஸ்.டி. உட்பட மோப்ப நாயின் உதவியுடன் சோதனையிடப்பட்ட போதும் பாம்பு இருப்பது கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் பூந்தொட்டியின் ஊடாக உள்ளே வந்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பூந்தொட்டி கீழ்த்தளத்திலிருந்து கொண்டு வரப்படும் போதும் முழுமையாக சோதனைக்குட்படுத்தப்படுவதில்லை என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. 6பேரிடமிருந்து பெறப்பட்ட சாட்சியங்களை பதிவு செய்த பின்னர் மேற்படி விசாரணைக்குழு பூந்தொட்டியின் ஊடாகவே பாம்பு அலுவலகத்தினுள் வந்திருக்கிறது என்பதை முடிவு செய்தது. இதன்படி, கீழ்த்தளத்திலிருந்து பூந்தொட்டிகளை கொண்டு வரும் போது முழுமையாக சோதனை செய்ய வேண்டும் என்றும், வாரத்தில் ஒருமுறை பாம்பு, பூச்சி கொல்லி மருந்துகள் தெளிக்க வேண்டும் என்றும் விசாரணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

Post a Comment

0 Comments