இலங்கையின் வடக்கில் இடம்பெயர்ந்த நிலையில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் மிகவும் ஆபத்தான நிலையிலேயே வாழ்ந்து வருவதாக இடம்பெயர்ந்தோர் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நாவின் விசேட பிரதிநிதி சலோகா பெயானி தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களின் கணிசமான அளவு மக்கள் இன்னும் இடம்பெயர்ந்த நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். வடக்கில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கு நிரந்தரமான வீடுகள், சமூக சேவைகள் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் எனவும் பெயானி கூறியுள்ளார். இடம்பெயர்ந்தவர்களின் நிலைமைகள் குறித்து மதிப்பீடு செய்வதற்காக இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த பெயானி தனது இலங்கை விஜயம் தொடர்பான அறிக்கையில் இதனை கூறியுள்ளார்.
|
பெண்கள், யுவதிகள் மற்றும் சிறார்கள் முக்கியமான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். பெண்களின் இனப்பெருக்கம் தொடர்பான உரிமைகள், உடலியல் ரீதியான பாதுகாப்பு பிரச்சினைகள் உட்பட பல விடயங்கள் இதில் அடங்கும். காணிகள் தொடர்பான சாத்தியமில்லாத அணுமுறை, சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்ல முடியாமை, சுதந்திரமான நடமாட்டம். இராணுவத்தின் தேசிய பாதுகாப்பு தொடர்பான கவலைகள் என்பனவும் அதில் அடங்கும்.
மோதல்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வை பெற்றுக்கொடுக்க வெளிப்படையாக தகவல்களுடன் இராணுவம் கைப்பற்றியுள்ள நிலங்களில் இருந்தும் ஏனைய சமூக செயற்பாடுகள் உட்பட சகல நடவடிக்கைகளில் இருந்தும் இராணுவம் விலகிக்கொள்ள வேண்டும் என பெயானி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
|
0 Comments