Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஹக்கீமின் எதிர்ப்பினால் கல்முனையில் தமிழ் பிரதேச செயலகம் உருவாக்கும் முயற்சி தோல்வி!

கல்முனையில் தனியான தமிழ் பிரதேச செயலகம் ஒன்றை அமைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முயற்சி தோல்வியடைந்துள்ளது.கல்முனையில் தமிழ் மக்களுக்கு என தனியான பிரதேச செயலகம் ஒன்றை அமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சித்தது. கல்முனை பிரதேச செயலகத்திற்கு மேலதிகமாக, உப பிரதேச செயலகமொன்று இயங்கி வருகின்றது. இந்த உப பிரதேச செயலகத்தை தமிழ் பிரதேச செயலகமாக மாற்றுவதற்கு கூட்டமைப்பு முயற்சித்தது. எனினும், இந்த முயற்சிக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
இன அடிப்படையில் பிரதேச செயலகங்களை நிறுவுவது ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.அமைச்சர் ஹக்கீமின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து புதிதாக பிரதேச செயலகம் அமைப்பது குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் இணக்கப்பாடின்றி முடிவடைந்துள்ளது.பொதுநிர்வாக அமைச்சர் ஜோன் செனவிரட்ன தலைமையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.

Post a Comment

0 Comments