முகச்சீரமைப்பு அறுவை சத்திரசிகிச்சை செய்வதற்காக ஐக்கிய இராச்சியம் இன்ர பிளாஸ்ற் அமைப்பைச் சேர்ந்த 11பேர் கொண்ட வைத்திய நிபுணர் குழு ஒன்று எதிர்வரும் டிசம்பர் 3 ஆம் திகதி மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கந்தசாமி முருகானந்தன் தெரிவித்தார். டிசம்பர் 19ஆம் திகதி வரை இங்கு தங்கியிருக்கும் இக்குழுவினர் தீக்காயத் தழும்புகளையும் தாடைகளையும் சத்திர சிகிச்சையின் மூல மாக மறுசீரமைப்பு செய்யும் பணியில் ஈடுபடவுள்ளனர்.
இத்தகைய சிகிச்சை அவசியமானவர்கள் மட்டு.போதனா வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் சத்திரசிகிச்சை கிளினிக்கிற்கு சமுகமளித்து பதிவு செய்து கொள்ளுமாறு பணிப்பாளர் க.முருகானந்தன் வேண்டுகோள் விடுத்து ள்ளார்.
0 Comments