நீதிமன்ற பிடியாணையின் பேரில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்யச் சென்ற போது, சந்தேக நபர் பொலிஸ் அதிகாரியை பாய்ந்து கடித்துள்ளார். முகத்தில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி நிக்கவரட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். நிக்கவரட்டிய பிரதேசத்தில் மேற்படி நபர் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக தேடப்பட்டு வந்தார். இந்நபர் பற்றிய தகவல் பொலிஸாருக்குக் கிடை த்ததையடுத்து சந்தேகநபரை கைது செய்யச் சென்ற வேளையிலேயே பொலிஸாரிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக பொலிஸ் அதிகாரியின் முகத்தை கடித்துக் குதறிவிட்டு அவர் தப்பிக்க முயன்றுள்ளார்.
|
எனினும் சமயோசிதமாக செயல்பட்ட ஏனைய பொலிஸ் அதிகாரிகள் சந்தேகநபரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். இந் நபர்முன்னர் ஒரு தடவை நீதிமன்ற கூண்டில் வைத்து கிருமிநாசினி அருந்தி தற்கொலை செய்து கொள்ள முயன்றமை குறிப்பிடத்தக்கது.
|
0 Comments