இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் 10 பொருட்களுக்கு அரசாங்கம் வரி விலக்கு அளித்துள்ளது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் அனுமதிக்கப்படாத பொருட்களுக்கே இந்த வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இந்த பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்குமாறு இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், அரசாங்கம் கடந்த 22ஆம் திகதி சமர்ப்பித்த 2014ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தினூடாக அப்பொருட்களுக்கு வரி விலக்களித்தது.
0 Comments