Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொழும்பு கண்காட்சி அரங்கு தீவிபத்துக்கு காரணம் கண்டுபிடிக்கப்பட்டது!

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் இடம்பெற்ற தீவிபத்துக்கு சதிநாசவேலைகள் எதுவும் காரணம் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. இளம் கண்டுபிடிப்பாளர் ஒருவர் தயாரித்த அடுப்பில் ஏற்பட்ட பெற்றோல் கசிவினாலேயே தீவிபத்து ஏற்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். குறித்த அடுப்பு 24 வயது இளைஞர் ஒருவரால், கண்காட்சிக்காக தயாரிக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
இந்த பெற்றோல் அடுப்பில் பொருத்தப்பட்டிருந்த குழாய்களில் ஏற்பட்ட எரிபொருள் கசிவினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை இம்மாதம் நடைபெற்ற பொதுநலவாய மாநட்டினை முன்னிட்டு அமைக்கப்பட்ட சர்வதேச ஊடகங்களுக்கான நிலையத்திலேயே இந்த தீவிபத்து ஏற்பட்டதாக வந்த தகவலையும் அஜித் ரோஹன மறுத்துள்ளார்.

Post a Comment

0 Comments