இலங்கையில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை, ரணில் விக்கிரமசிங்க, சரத் பொன்சேகா, ஆர்.சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க உள்ளிட்ட முக்கிய எதிரணி அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்து எதிர்கொள்வது தொடர்பாக பேச்சுக்கள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த அரசியல் கூட்டணியில் இணையும் அரசியல் கட்சிகள் மற்றும் அதன் தலைவர்கள் பற்றிய விபரங்களை வெளியிடப்படாமல்,புதிய கூட்டணியை ஏற்படுத்துவது தொடர்பிலான சில சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.
|
இந்தப் புதிய கூட்டணியை சேர்ந்த ஒருவரை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக நிறுவதற்கும் திட்டமிடப்பட்டு வருகிறது. ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு பொது வேட்பாளரின் பெயர் பகிரங்கப்படுத்தப்பட உள்ளதாக அந்த தகவல்கள் குறிப்பிட்டன. இந்தப் புதிய கூட்டணியில் இணைவதா இல்லையா என்பது பற்றி ஜே.வி.பி இதுவரை முடிவு செய்யவில்லை. புதிய கூட்டணியில் தொழிற்சங்கங்கள், பொது அமைப்புகள் பலவற்றை இணைத்து கொள்வது தொடர்பில் எதிர்காலத்தில் பேச்சுக்கள் நடத்தப்பட உள்ளன என்றும் அந்த தகவல்கள் மேலும் தெரிவித்தன.
|
0 Comments