Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில்பெண்கள் குளிக்கும்போது படம் பிடிக்கும் கும்பல்


0
மட்டக்களப்பில் பெண்கள் குளியலைறை போன்ற இடங்களில் படம் பிடிக்கும் கும்பல் குறித்து அக்கறையுடனும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட உள்ளுர் அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின்தலைவரும், பிரஜைகள் குழுவினுடைய தவைருமாகிய வ.கமலதாஸ் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக தனிமையில் இருக்கும் பெண்கள் தங்கியிருக்கும் இடங்களில் குளியலறைபோன்ற இடங்களில் வீடியோக்கமராக்கள் மூலம் படம்பிடிக்கும் செயற்பாடுகளில் சிலர் ஈடுபட்டு வருவதாகவும் இவர்கள் பெண்களை அச்சத்துக்குள் தள்ளும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் இவர்கள் குறித்ருது அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்புக்கு வெளி இடங்களிலிருந்து வந்து விடுதிகள் போன்ற இடங்களில் தங்கியிருக்கும் ஒரு சிலரே இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அத்துடன் இவ்வாறான வீடியோக்களை பிடித்துக் கொண்டு பிழையான செயற்படுகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்களும் இருக்கின்றன.
அத்துடன் கொள்ளை, பலாத்காரம் போன்றவைகளும் நடைபெறலாம். எனவே குளியலறை போன்ற இடங்களைப் பாவிக்கும் போதும், தனிமையில் கல்வி கற்கும், செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்களும் தம்மைப்பாதுகாத்துக் கொள்வதற்கும் பாதுகாப்பான நடைமுறைகளைக் கையாள்வதற்கும் பழகிக் கொள்ள வேண்டும் என்றும் வ.கமலதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இவ்வாறன படப்பிடிப்புக்கள் நடைபெற்றுள்ளமை குறித்து தமக்குக்கிடைத்துள்ள முறைப்பாட்டின் அடிப்படையிலேயே தான் இந்த தகவவை வெளியிடுவதாகவும், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளைத் தான் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றார்.

Post a Comment

0 Comments