Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பாடல் கேட்டு எழும்பிய பிணம் – அதிர்சியடைந்த பெண் (வீடியோ)

விளம்பரம் என்பதற்கு மேலைத்தேய நாடுகளில் பல யுக்திகள் கையாளப்படுகின்றன. மக்கள் இலகுவாக புரிந்து கொள்ளக்ககூடியதுமாக விளம்பரங்கள் அமைக்கப்பட்டால் மாத்திரமே அது வெற்றியளிக்கிறது. இங்கே நீங்கள் ஒரு விளம்பரத்தை காணப்போகிறீர்கள். இதில் ஒரு பெண் காரில் பயணம் செய்கிறாள். வீதியில் நிறுத்தப்பட்ட அவளது காருக்கு அருகில் இன்னுமொரு ஆண் காருடன் தரிக்கிறார்.

பின்னர் அவர் இப்பெண்ணை சைட் அடிக்க அவரின் லொல்லு தாங்காத பெண் தனது காரில் உள்ள ரேடியோ பிளேயரை ஆன் செய்து பாடல் கேட்கிறார். இந்நிலையில் லொள்ளு விட்ட ஆண் தனது காரை செலுத்தி செல்லவே பின்னரே தெரிகிறது அவர் ஒரு சடலத்தை ஏற்றி வந்தவர் என்று. ஆனால் அவரது காரில் இருந்த சடலம் மாயாமாக மறைந்து வெறும் சவப்பெட்டி மாத்திரம் திறந்த நிலையில் இருக்கிறது.

பின்னர் பெண் சட்டன தனது காரின் பின் ஆசனத்தை பார்க்க அங்கு ஆறுதலாக அமர்ந்து பெண் ஒலிக்க விட்ட பாடலுக்கு ஆடி ரசித்துக்கொண்டிருக்கிறது அந்த பிணம். இப்படியான ஒரு காட்சியை குறுகிய நேரத்தில் மிகவும் தத்ரூபமாக எடுத்துள்ளார்கள். இதன் மூலம் அந்த பிளேயரில் பாடல் கேட்டால் பிணம் கூட எழும்பி ரசிக்குமாம்… என்னமா யோசிக்கிறாங்கய்யா

Post a Comment

0 Comments