சனல்-4 ஊடகத்தின் பணிப்பாளர் கெலும் மக்ரேவிற்கு வீசா வழங்க இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. இலங்கை தொடர்பிலான சர்ச்சைக்குரிய கணொளிகளை மக்ரே வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. காணொளி ஒன்றை டெல்லியில் காட்சிப்படுத்த திட்டமிட்டிருந்த போதிலும் இதுவரையில் வீசா கிடைக்கவில்லை என அவா குறிப்பிட்டுள்ளார். நவம்பர் மாதம் 6ம் திகதி டெல்லி செல்லத் திட்டமிட்டிருந்தேன். எட்டு மாதங்களுக்கு முன்னதாகவே வீசாவிற்காக விண்ணப்பித்திருந்தேன். இலங்கைப் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் இந்தியாக கவனம் செலுத்தி வருகின்றமையை அறிவேன். இவ்வாறான ஓர் நிலையில், ஆதாரங்களையும் காணொளிகளையும் சமர்ப்பிக்க ஏன் இந்தியா சந்தர்ப்பம் அளிக்கவில்லை என்பது புரியவில்லை.
|
லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் பலமுறை தொடர்பு கொண்டும், அங்குள்ள அதிகாரிகள் எந்தப் பதிலையும் தரவில்லை. இதுதொடர்பாக, தாம் இந்தியத் தூதரகத்துக்கும், இந்திய உள்துறை அமைச்சுக்கு இரண்டு முறையும் மின்னஞ்சல் கடிதங்களை அனுப்பியுள்ளேன் என தெரிவித்துள்ளார். இலங்கையின் அழுத்தத்தின் பேரில் தனக்கு நுழைவிசைவு வழங்க இந்தியா மறுத்திருக்காது என்று தாம் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார் இலங்கை தொடர்பான காணொளிகளை காட்சிப்படுத்த திட்டமிட்ட வகையில் இலங்கை அரசாங்கம் தடைகளை எற்படுத்தி வருவதாக மக்ரே தெரிவித்துள்ளார்.
|
0 Comments