முகத்தை முழுமையாக மறைக்கும் வகையிலான தலைக்கவசப் பாவனைக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடையை தற்காலிகமாக நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அதிக விலைக்கு தலைக்கவசம் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களின் பிரகாரம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
முழுமையான முகத்தை மறைக்கும் வரையிலான தலைக்கவசங்களை அணிபவர்களின் சிலர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுப்பட்டிருக்கின்றமையும், தலைக்கவசங்கள் கண்களை மறைப்பதால், வீதி தெளிவாக தென்படமையால் விபத்து இடம்பெறுவதாலும் இதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.


0 Comments