மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற விபத்துச்சம்பவத்தில் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பழுகாமம் இருந்து திக்கோடைக்கு சென்ற முச்சக்கர வண்டியை வெல்லாவெளியில் இருந்து கொக்கட்டிச்சோலைக்கு சென்ற கன்டர் வாகனம் மோதியுள்ளது.
இந்த விபத்தின்போது குறித்த முச்சக்கர வண்டியில் சாரதியுடன் ஐந்து பேர் பயணம் செய்துள்ளனர்.இதன்போது முச்சக்கர வண்டி சாரதியான பழுகாமம்,காந்தி கிராத்தினை சேர்ந்த வாசு(41வயது) என்பருடன் நான்கு பெண்களும் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்தவர்கள் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை முச்சக்கர வண்டி மீது மோதிய கன்டர் வாகனம் தப்பிச்சென்றுள்ளதாகவும் அவற்றினை கண்டிபிடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
0 Comments