சில கட்சிகள் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்காது பாராளுமன்ற பாரம்பரியங்களை உடைத்துள்ளன என்று குற்றம்சாட்டியுள்ளார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம். வரவு செலவுத் திட்ட மூன்றாம் நாள் குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது- அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக் குழுவில் சில கட்சிகள் பங்கேற்காது உள்ளன.இதன் மூலம், அவை பாராளுமன்ற பாரம்பரியங்களை உடைத்துள்ளன.
|
அரசாங்கத்தின் பங்காளர்களாக உள்ள கட்சிகளும் இதிலிருந்து விலகியுள்ளன. இந்த விவகாரத்திற்கு தீர்வு காணப்பட வேண்டும். அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக செயற்பட்டு வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்தும் அரசாங்கத்துடன் இணைந்தும் தேர்தல்களில் போட்டியிட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கில் ஆட்சியமைத்துள்ளது.இணக்கப்பாட்டுடன் செயற்பட்டு 50 க்கு 50 அணுகுமுறை முன்வைக்கப்பட வேண்டும். அனைவரும் இணைந்து செயற்பட்டு பயனுறுதியான அபிவிருத்தியை ஏற்படுத்த இணக்கப்பாட்டுடன் செயற்பட வேண்டும். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
|
0 Comments