Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

உலகெங்கும் உள்ள தமிழாசிரியர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு

ஒரு வருடத்ததில் தமிழாசிரியருக்கான (Diploma) டிப்ளோமா கற்கைநெறி அறிமுகம் செய்துள்ள் தமிழ்நாட்டின் எஸ்ஆர்எம் பல்கலைக் கழகம் உலகெங்கும் உள்ள பல நாடுகளில் தமிழ் மொழியை கற்பித்து வரும் தமிழாசிரியர்களின் நலன் கருதி உலகத் தமிழ் பண்பாட்டுக் கழகம் ஒரு டிப்ளோமா கற்கை நெறியை தமிழ் நாட்டின் எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தோடு இணைந்து ஆரம்பித்துள்ளது எனவும் எனவே உலகெங்கும் தமிழ் கற்பித்தலில் ஆர்வமுடைய ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் ஆகியோர் மேற்படி கற்கை நெறியில் உடனடியாக இணைந்து எதிர்காலத்தில் ஒரு தகுதிவாய்ந்த தமிழாசிரியராகும் வாய்ப்பை பெற்றுக் கொள்ளுமாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் திரு துரை கணேசலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்;வருமாறு கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகில் உள்ள மிகவும் பிரபலமான SRM பல்கலைக்கழகம் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தோடு இணைந்து முன்னெடுக்கும் அரிய வாய்ப்பு இது.
முழுக்க முழுக்க புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ்ச்சிறார்கள் தமிழ்க் கல்வியை இலகுவாக பயிலவும் தமிழைப் பிழையின்றி பேசவும் படிக்கவும் எழுதவும் இப்பாடநெறி உதவும். அடிப்படை தமிழ் இலக்கணம் மட்டுப்படுத்தப்பட்ட தமிழ் இலக்கிய வரலாறு அத்துடன் கணனித் தமிழும் இணைய வழிக் கல்வியும் முக்கிய விடயமாகும்.
மேற்படி டிப்ளோமா கற்கைநெறியில் இணைந்து கொள்ளுவதற்கு தேவையான தகைமைகள் பின்வருமாறு அமைகின்றன. இலங்கையில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 6 பாடங்களில் சித்தி பெற்றிருந்தால் இந்தப் பாடத்திட்டத்தில் நீங்கள் இணையலாம். முழுக்க முழுக்க புதிதாக எழுதப்பட்ட பாடத்திட்டம். புலம் பெயர் சமூகத்தில் வாழும் தமிழ்ச் சிறார்கள் இரண்டாவது மூன்றாவது மொழியாக தமிழ் மொழியை படிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றார்கள். அவர்கள் இலகுவாக படிப்பதற்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்ட முதலாவது பாடத்திட்டம்.
இந்த கற்கை நெறியை படித்து முடிப்பவர்கள் புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணி பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும். தற்போது இலங்கை இந்தியாவில் இருப்பவர்களும் இப்பயிற்சி நெறியை ஆரம்பிக்கத் தேவையான உதவிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த டிப்ளோமா கற்கை நெறியில் சேர ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை 1ம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரை விண்ணப்பிக்கலாம். இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்க விரும்புவோர் பின்வரும் இணையத்தள இணைப்பிற்குச் செல்லவும்.
www.srmuniv.ac.in/tamilperayam
முழுக்க முழுக்க இணைய வழியூடாகவும் அச்சிட்ட பாடப்புத்தகங்களும் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும். அதற்கு மேலதிகமாக சில இடங்களில் நேரடிச் சிறப்பு வகுப்புகளும் நடைபெறும்.
மேலதிக விபரங்களுக்கு ளுசுஆ பல்கலைக்கழக மின்னஞ்சல் diaspora.tp@srmuniv.edu.in என்னும் மின்னஞ்சல் விலாசத்திற்கு தொடர்பு கொள்ளவும்
இணையத்தளம் - - www.srmunit.ac.in
விபரங்களைப் பார்வையிடுவதற்கு – imtcwep.com
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்
இணைப்பாளர் 1. இல. சுந்தரம் துணைப்பேராசிரியர்
சென்னை இந்தியா
தொலைபேசி 919842374750
2. வி.சு. துரைராசா
சர்வதேச தமிழ்க்கல்விப் பொறுப்பாளர்
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்
தலைமைச் செயலகம் கனடா
மின்னஞ்சல்:raja@efsginc.com
தொலைபேசி: 011 647 829 4044
ஒவ்வொரு நாட்டிலும் இயங்கும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க கிளைகளும் ளு.சு.ஆ. பல்கலைக்கழகம் பயிற்சி மையங்களாக (Study Centre) பல்கலைக்கழகத்தால் நியமிக்கப்பட்டுள்ளர் என்பதை மகிழ்ச்சியுடன் உலகத் தமிழ் பண்பாட்டுக் கழகம் தெரிவிக்கின்றது.

Post a Comment

0 Comments